பிரபுதேவா – வடிவேலு கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைகிறது.
‘காதலன்’ படம் தொடங்கி பல படங்களில் இணைந்து நடித்தது பிரபுதேவா – வடிவேலு கூட்டணி. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். வடிவேலு கேட்டார் என்பதற்காக ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பல வருடங்கள் கழித்து பிரபுதேவா – வடிவேலு கூட்டணி இணைந்து நடிக்கவுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்னேஷ் வாசு, எடிட்டராக ஆண்டனி மற்றும் இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
பிரபுதேவா – வடிவேலு உடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு தயாராகி வருகிறது.
பிரபுதேவா, வடிவேலு ஏற்கெனவே இணைந்து காதலன், எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்தனர். பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ மற்றும் ‘வில்லு’ திரைப்படங்களில் வடிவேலு நடித்திருந்தார்.