யஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்க மோஹித் சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மோஹித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பட்டா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘சையாரா’. யஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.
இதனால் இப்படத்தில் பணிபுரிந்த அனைவரையும் அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய பலரும் முன்வந்தனர். குறிப்பாக மோஹித் சூரி இயக்கத்தில் நடிக்க பல்வேறு முன்னணி பிரபலங்கள் முடிவெடுத்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார்கள். ஆனால், யஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மோஹித் சூரி.
இப்படம் முழுக்க காதலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, ஜூன் மாதத்துக்கு மேல் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்துமே கையெழுத்தாகி முடிந்துவிட்டன.