பாபி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிரஞ்சீவி.
பாபி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் ‘டாக்கு மஹாராஜ்’. இப்படத்தினை தொடர்ந்து கே.வி.என் தயாரிக்கவுள்ள படத்தினை இயக்க ஒப்பந்தமானார் பாபி. தற்போது அக்கதையில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பும் சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி – பாபி இருவரும் இணைந்து ‘வால்டர் வீரய்யா’ என்ற படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சீரஞ்சிவி – பாபி இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளது.
‘விஸ்வம்பரா’ மற்றும் ‘மனா சங்கரவாரா பிரசாத் காரு’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. இந்தப் படங்களைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிரஞ்சீவி.