மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது.
ரவி அரசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து விஷாலின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் விஷால்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி மீண்டும் இணையும் படத்துக்கும் விஜய் ஆண்டனியே இசையமைக்கவுள்ளார்.
’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சுந்தர்.சி. அதனை முடித்துவிட்டு விஷால் படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனிக்கவுள்ளார். இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் நவம்பரில் தொடங்கவுள்ளார்கள். இதில் நடிப்பதற்கான நடிகர்கள் தேர்வும் விரைவில் தொடங்கவுள்ளது.