ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
2014-ம் ஆண்டு வெளியான படம் ‘தெகிடி’. இதன் த்ரில்லர் திரைக்கதை, பாடல்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க இப்படம் வெளியானது.
ஐடி துறையில் பணிபுரிந்து வந்த ரமேஷ் நேரடியாக இயக்குநராக அறிமுகமானார். ‘தெகிடி’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஐடி துறை பணிக்கே சென்றுவிட்டார். தற்போது மீண்டும் அவருக்கு இயக்குநர் ஆசை வந்துள்ளது. இம்முறையும் அசோக் செல்வன் நடிக்க புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர், இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரம் விரைவில் தெரியவரும்.