‘மாரீசன்’ படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநரே பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தின் கதைக்களம் என்ன என்பதை இயக்குநர் சுதீஷ் சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி வடிவேலு ஒரு பணக்காரர் மட்டுமன்றி அல்சைமர் நோயாளி. ஒரு கட்டத்தில் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கிறார் வடிவேலு. இதனை ஃபகத் ஃபாசில் பார்த்து விடுகிறார். அதனைத் தொடர்ந்து வடிவேலுவிடம் இருந்து அந்தப் பணத்தை எடுத்துவிட வேண்டும் என முனைகிறார்.
இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலைக்கு ஃபகத் ஃபாசில் பைக்கில் இறக்கி விடுவதாக அழைத்து வருகிறார். இந்தப் பயணத்தில் என்ன நடந்தது என்பதுதான் கதை. இறுதியில் வடிவேலுமிடம் இருந்து ஃபகத் ஃபாசிலுக்கு பணம் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.
சுதீஷ் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், லிவிங்ஸ்டன், கோவை சரளா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக கலைச்செல்வன், எடிட்டராக ஸ்ரீஜித் சாரங் மற்றும் இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.