தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற ‘கைதி’ திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தினை மலாய் மொழியில் ரீமேக் செய்திருக் கிறார்கள். ‘BANDUAN’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இப்படத்தில் ஆரோன் ஆசிஸ் நாயகனாக நடித்துள்ளார். மலாய் ரீமேக்கினை Kroll Azry இயக்கியுள்ளார்.
இதன் அறிமுக வீடியோ மலேசியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ’BANDUAN’ படப்பிடிப்பு முடிவடைந்து அக்டோபருக் குப் பின் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இதர விவரங்களை விரைவில் படக்குழு வெளியிடும் என தெரிகிறது.
எல்.சி.யூ படங்களை ‘கைதி’ கதையில் தான் தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். அதற்குப் பின் ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய படங்களை உருவாக்கினார். இதனால் ‘கைதி’ படத்துக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. அதன் இரவு நேர காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகள் என அனைத்து விதத்திலும் கொண்டாட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.