‘பேட்ஏஸ் (BADASS)’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘கிங்டம்’ படத்துக்கு இறுதியாக இசையமைத்திருந்தார் அனிருத். அதனைத் தொடர்ந்து நானி நடித்து வரும் ‘தி பாரடைஸ்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் புதிய படமொன்றுக்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நாக வம்சி தயாரிப்பில் சித்து நடிக்கவுள்ள படம் ‘பேட்ஏஸ்’. ரவிகாந்த் இயக்கவுள்ள இப்படத்துக்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. முழுக்க தெலுங்கு திரையுலகினரை கலாய்த்து இப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழில் ‘ஜனநாயகன்’, ‘ஜெயிலர் 2’, ‘எல்.ஐ.கே’, ‘அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம்’, ‘வெற்றிமாறன் – சிம்பு இணையும் படம் ’ உள்ளிட்ட பல படங்களுக்கு பணிபுரிந்து வருகிறார் அனிருத். இவை தவிர்த்து தெலுங்கிலும் அனிருத் கவனித்து செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.