ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, அதர்வா நடித்த ‘100’ உள்பட சில படங்களை இயக்கியவர் சாம் ஆண்டன். இவர் அடுத்து இயக்கும் படம் ‘அன்கில்_123’.
மனோதத்துவ த்ரில்லர் படமான இதில் அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்திலும் சங்கீதா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைக்கும் இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

