‘மதராஸி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகியுள்ள இப்படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. திங்கட்கிழமை வசூலை வைத்தே இப்படம் எந்தளவுக்கு வசூல் செய்யும் என்பதை கணிக்க முடியும்.
இதனிடையே ’மதராஸி’ பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரைப் பாராட்டியிருக்கிறார். இது குறித்து, “பல ரசிக்கத்தக்க திரையரங்க அனுபவங்களுடன் கூடிய ஈர்க்கக்கூடிய ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம் ‘மதராஸி’. கதையின் தன்மையையும் உணர்வுகளையும் அழகாக இணைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். காதல் பாதையும், குற்றவாளி பாதையும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. அதில் அருமையாகவும் நடித்துள்ளார். ஆக்ஷன் நாயகனாகவும் ஆச்சரியப்படுத்துகிறார். அனிருத்தின் பின்னணி இசை படத்துக்கு வலுச்சேர்த்துள்ளது. வித்யூத் ஜாம்வாலின் ஸ்டைலான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
#Madharaasi An engaging commercial entertainer with many enjoyable theatrical moments. @ARMurugadoss connected the elements and emotions brilliantly. Blending the love track and crime track was done well. @Siva_Kartikeyan ‘s characterisation was interesting and different which he…
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 5, 2025