Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘மதயானைக் கூட்டம்’ இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி
    சினிமா

    ‘மதயானைக் கூட்டம்’ இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

    adminBy adminJune 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘மதயானைக் கூட்டம்’ இயக்குநர் விக்ரம் சுகுமாரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 47.

    பரமக்குடியை சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய அவர், ‘ஆடுகளம்’ படத்துக்கு வசனம் எழுதினார். இதையடுத்து கதிர், ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடிகராக அறிமுகமானார். இதை நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரித்தார். இதையடுத்து சாந்தனு நடித்த ‘ராவணக் கோட்டம்’ படத்தை இயக்கினார். பின்னர் அவருக்கு அடுத்த வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், மதுரையில் உள்ள தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்வதற்காக அங்கு சென்றிருந்தார். கதை சொல்லிவிட்டு சென்னை திரும்புவதற்காக நேற்று முன் தினம் இரவு பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

    பின்னர் அவரது உடல், அவர் வசித்த சென்னை ரெட் ஹில்ஸ் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதிச்சடங்கு நடந்தது. மறைந்த விக்ரம் சுகுமாரனுக்கு ஜெய ரூபா என்ற மனைவி உள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    “மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்” – இயக்குநர் ராம் விருப்பம்!

    July 2, 2025
    சினிமா

    விஜய் சேதுபதி – பூரி ஜெகந்நாத் பட பணிகள் பூஜையுடன் தொடக்கம்

    July 1, 2025
    சினிமா

    ’கண்ணப்பா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி: மோகன்பாபு உற்சாகம்

    July 1, 2025
    சினிமா

    நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: இயக்குநர் கே.பாக்யராஜ்

    July 1, 2025
    சினிமா

    ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    July 1, 2025
    சினிமா

    திரைப் பார்வை: மார்கன் | ஓர் இரக்கமற்ற படத்தொகுப்பாளரின் நெத்தியடி!

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்
    • “மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்” – இயக்குநர் ராம் விருப்பம்!
    • சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?
    • ‘நத்திங் போன் (3)’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயர வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.