சிதம்பரம் இயக்கத்தில் அடுத்ததாக ‘பாலன் தி பாய்’ என்ற பெயரில் படம் உருவாகவுள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. இந்தியா முழுக்கவே இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் சிதம்பரத்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. பல்வேறு முன்னணி நடிகர்களும் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால், அடுத்ததாக முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் சிதம்பரம். இதன் கதையினை ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் எழுதியிருக்கிறார். இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் மற்றும் தேஸ்பியன் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
சிதம்பரம் இயக்கி வரும் படத்துக்கு ‘பாலன் தி பாய்’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பின்பு பெரிய நடிகர் ஒருவரின் படத்தினை இயக்கவுள்ளார் சிதம்பரம். இதற்கான கதை, திரைக்கதையினை படப்பிடிப்புக்கு இடையே எழுதி வருகிறார்.