‘ஆதிபுருஷ்’ படத்துக்காக மகனிடம் மன்னிப்புக் கேட்டதாக சைஃப் அலிகான் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. இதன் காட்சியமைப்புகள், கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்துக்காகவும் பெரும் கிண்டலுக்கு ஆளானது படக்குழு. மேலும், இப்படமும் பெரும் தோல்வியை தழுவியது. இப்படத்துக்குப் பிறகு ஓம் ராவத் இன்னும் படம் எதுவும் இயக்காமல் இருக்கிறார்.
இதனிடையே, சமீபத்தில் பேட்டியொன்று அளித்துள்ளார் சைஃப் அலிகான். அதில் ”உங்களுடைய குழந்தைகள் உங்கள் படத்தைப் பார்த்து என்ன சொல்வார்கள்” என்று சைஃப் அலிகானிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு “சமீபத்தில் மகன் தைமூருக்கு ‘ஆதிபுருஷ்’ படத்தைக் காட்டினேன். சில மணித்துளிகளில் என்னை ஒரு பார்வை பார்த்தான். உடனே அவனிடம் மன்னிப்புக் கேட்டேன். அதற்கு ஒகே என்று கூறி மன்னித்துவிட்டான்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இணையத்தில் சைஃப் அலிகானின் இந்தப் பேச்சு ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஏனென்றால், ‘ஆதிபுருஷ்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் சைஃப் அலிகான்.