‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக நிவின் பாலி நடித்து வருவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வரும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் வில்லனாக யார் நடித்து வருகிறார் என்பதை ரகசியமாக வைத்திருந்தது படக்குழு. தற்போது அதில் நிவின் பாலி நடித்து வருகிறார் என்பதை க்ளிம்ஸ் வீடியோ உடன் அறிவித்துள்ளது. இதில் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவின் பாலி.
லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வரும் யுனிவர்சிஸ் படங்களில் இணைந்துள்ளது ‘பென்ஸ்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தினை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் மற்றும் ஜி ஸ்கோட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம், இசை உரிமையினை திங்க் மியூசிக் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றிவிட்டன. இதனால் விரைவில் படப்பிடிப்பினை முடித்து வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.