இந்திப் பட இயக்குநரான விவேக் அக்னிகோத்ரி, ‘த தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ என்ற படத்தை 2019-ம் ஆண்டு இயக்கினார்.
இதையடுத்து அவர் இயக்கி, 2022-ம் ஆண்டு வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வரவேற்பைப் பெற்றது. நாடு முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர் ‘த வேக்ஸின் வார்’ என்ற படத்தைக் கடந்த ஆண்டு இயக்கினார். இது அதிகம் பேசப்படவில்லை.
இப்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்: த பெங்கால் சாப்டர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் செப்.5-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பை, ‘த பெங்கால் ஃபைல்ஸ்: ரைட் டூ லைஃப்’ என்று மாற்றியுள்ளார். இதைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ள விவேக் அக்னிகோத்ரி, இதன் டீஸர், நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.