Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” – முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை
    சினிமா

    “புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” – முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” – முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்து 10 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “பிறக்காத என் குழந்தைக்கு நீதி வேண்டும். அப்பா ஸ்டாலின் அவர்களே, சென்னை காவல் ஆணையரிடம் நான் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கினார். இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.நிறைமாதத்தை எட்டும் நிலையிலும், நான் என் பார்வையற்ற தாயுடன் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி ட்ரீட்மென்ட் அளிக்கப்படுகிறது. மேலும் அவர் எனக்கு எதிராக அநாகரீகமான, ஆபாசமான சமூக ஊடக பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்.

    அப்பா, உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற அதிர்ஷ்டம் இல்லாத பெண்கள் நம்புகிறார்கள். இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி மன்றாடுகிறேன். எந்தவொரு விஐபியும், பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித் திரிய முடியுமா? என் பிறக்காத குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” இவ்வாறு ஜாய் கிரிசில்டா தெரிவித்தார்.

    சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகைப்படத்துடன் அறிவித்தார். மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை. அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

    மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் வாழ மறுப்பதாகவும், தன்னை தாக்கியதாகவும் கூறி ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையரகத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார்

    Justice for my unborn child.#Appa @CMOTamilnadu @chennaipolice_ @tnpoliceoffl @ArunIPSCOP

    It’s been 10 days since I submitted a complaint to the Chennai city commissioner, narrating how celebrity chef and actor Mr. Madhampatti Rangaraj cheated and deceived me into MARRIAGE…


    — Joy Crizildaa (@joy_stylist) September 8, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘பேட் கேர்ள்’ விமர்சனம் – ‘புரட்சிகர’ முயற்சியும், தாக்கமும் எப்படி?

    September 8, 2025
    சினிமா

    ‘புஷ்பா 3’ கண்டிப்பாக உருவாகும்! – இயக்குநர் சுகுமார் உறுதி

    September 8, 2025
    சினிமா

    செப்.12-ல் 10 படங்கள் ரிலீஸ்

    September 8, 2025
    சினிமா

    சாவித்திரி: மாறு வேடத்தில் சென்று தமிழ்க் கற்ற நடிகை

    September 8, 2025
    சினிமா

    ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதை உறுதி செய்த கமல்ஹாசன்!

    September 7, 2025
    சினிமா

    200-வது படத்தை அறிவிக்கிறார் அக்‌ஷய் குமார்!

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கலாச்சார ரீதியாக இணையும் கேம்பர்லீ நகரமும் மதுரையும்: பென்னி குயிக் நினைவை போற்றும் விதமாக ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு
    • தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனை
    • ‘டெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்
    • இதய ஆரோக்கியம்: 4 விஷயங்கள் இருதயநோய் நிபுணர் தனது நோயாளிகளைப் பின்பற்றும்படி ஒருபோதும் கேட்க மாட்டார்கள்
    • தமிழகத்​தில் சில மாவட்​டங்​களில் செப்.10-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.