பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘தி ராஜா சாப்’. மாருதி இயக்கியுள்ள ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை, பியூப்பிள் மீடியா பேக்டரி, டில்லியை சேர்ந்த ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
“ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடித்து வெளியிடுவது, நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் வெளிப்படைத் தன்மை உள்பட பல்வேறு விஷயங்களில் பியூப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் ஒப்பந்தத்தை மீறிவிட்டது.
இதனால் இந்தப் படத்துக்காக நாங்கள் முதலீடு செய்த ரூ.218 கோடியை 18 சதவிகித வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியுள்ளது. இதனால் ‘த ராஜா சாப்’ படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கல் எழுந்துள்ளது.