தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’, ‘அரண்மனை 3’. ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராஷி கண்ணா.
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் இணைந்துள்ளார். ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தைத் தொடர்ந்து பவன் கல்யாண் நடிக்கும் படம் இது. இதை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். ஸ்ரீலீலா, கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ராஷி கண்ணாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்லோகா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.