கண்ணா ரவி நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘காக்கி ஸ்குவாட்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பில் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளார் ரவி மோகன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படங்கள் தவிர்த்து புதிய படமொன்றை வழங்கவுள்ளார் ரவி மோகன். அப்படத்தினை சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் கண்ணா ரவி. ‘காக்கி ஸ்குவாட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகிறார் கண்ணா ரவி. இதற்கு முன்னதாக சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘காக்கி ஸ்குவாட்’ படத்தினை சக்திவேல் இயக்கியுள்ளார். இதற்கு முன்னதாக ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘அலங்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்திவேல். மேலும், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தினை வடிவமைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கண்ணா ரவி உடன் நடித்தவர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு.