நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘மஹாநடி’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் நாக் அஸ்வின். ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகத்தின் பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கவுள்ளார் நாக் அஸ்வின்.
முழுக்க நாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனையும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
சாய் பல்லவி நடிக்கவுள்ள படத்தினை முடித்துவிட்டு, ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தின் பணிகளை நாக் அஸ்வின் தொடங்கவுள்ளார். இதில் தீபிகா படுகோன் விலகிவிட்டதால் அவருக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார் என்பதும் விரைவில் தெரியவரும்.