நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது
அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. இதனை நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.
இது குறித்து கூறிய அவர், “தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-வது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். ‘கூலி’ தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. “இது ஆக்ஷன், ஃபேமிலி சென்டிமென்ட், டிராமா கலந்து உருவாகும் படம். இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா.