Last Updated : 02 Oct, 2025 09:56 PM
Published : 02 Oct 2025 09:56 PM
Last Updated : 02 Oct 2025 09:56 PM

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, ‘நாயகன்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது.
பழைய படங்கள் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் ட்ரெண்டில் இணைந்துள்ளது ‘நாயகன்’. நவம்பர் 6-ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது 71-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு ‘நாயகன்’ ரீரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான மெருக்கேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘நாயகன்’. 1987-ம் ஆண்டு வெளியான இப்படம் பெருமளவில் கொண்டாடப்பட்டது. இப்போது இப்படத்தினை கல்ட் க்ளாஸிக் என்று கொண்டாடி வருகிறார்கள். இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.
இதில் ஜனக ராஜ், சரண்யா பொன் வண்ணன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, நாசர் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்திருந்தார்கள். மும்பையைப் பின்னணியாக கொண்டு இப்படத்தை உருவாக்கி இருந்தார் மணிரத்னம். இதற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணிபுரிந்திருந்தார். இப்படத்துக்கு பின்பு கமல் – மணிரத்னம் இருவரும் இணைந்து பணிபுரிந்த படம்தான் ‘தக் லைஃப்’. அப்படம் பெரும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US
தவறவிடாதீர்!