
நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக வட சென்னை போன்று அரங்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. இந்த அரங்கில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

