தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’.
மலையாளத்தில் பேசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’. விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
தருண் பாஸ்கர், இஷா ரெப்பா ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 1-ல் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கான அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. விரைவில் டீஸர், ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்த உள்ளது படக்குழு.
அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.சஜீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ருஜன் யாரபோலு, ஆதித்யா பிட்டி, அனுப் சந்திரசேகரன், சாதிக் சைக், நவீன் சனிவரப்பு உள்ளிட்ட பலர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.