துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார், பாக்யஸ்ரீ போர்சே. மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், ராணா, சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மானை, உண்மையான நடிப்பு சக்கரவர்த்தி என்று பாக்யஸ்ரீ போர்சே பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என் மீது நம்பிக்கை வைத்து, என்னைப் போன்ற ஒரு புதுமுகத்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு இயக்குநர் செல்வமணி செல்வராஜுக்கு நன்றி. அவர்தான் எனது முதல் ஆசிரியர், இயக்குநர். நடிகர் ராணா இந்தப் படத்தின் முதல் நாளிலிருந்தே எனக்கு ஆதரவளித்து வருகிறார். ஒரு நடிகராக இந்தப் பயணத்தில் அவரை எனது வழிகாட்டியாகக் கொண்டிருப்பது அதிர்ஷ்டம். அவர் ஆதரவும் நிலையான வழிகாட்டுதலும் இல்லாமல், என்னால் சிறப்பாக நடித்திருக்க முடியாது.

