இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார், தீபிகா படுகோன். இவர் பிரபாஸ் ஜோடியாக ‘கல்கி 2898’ ஏடி படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு அதிக சம்பளம் என்று கூறப்பட்டது. ஆனால் எவ்வளவு என்று கூறவில்லை. இப்போது மீண்டும் பிரபாஸ் ஜோடியாக ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
இதை ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இந்தப் படத்துக்காக நடிகை தீபிகா படுகோனுக்கு ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கைவிட தீபிகா அதிக சம்பளம் வாங்குவதாகவும் இந்திய சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுதான் என்றும் இணையத்தில் கூறி வருகின்றனர்.