Last Updated : 15 Sep, 2025 07:14 AM
Published : 15 Sep 2025 07:14 AM
Last Updated : 15 Sep 2025 07:14 AM

நாட்டார் கதை பின்னணியில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ‘தி டார்க் ஹெவன்’ . இதை பாலாஜி தயாரித்து இயக்குகிறார். மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முதலில் நகுல் ஹீரோவாக நடித்தார். இப்போது அவரை மாற்றியுள்ளனர்.
இதுபற்றி இயக்குநர் பாலாஜி கூறும்போது, ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் போலீஸ்காரரைப் பற்றிய கதை. இதில் நாயகனாக நகுல் தேர்வு செய்யப்பட்டு சில நாட்கள் படபிடிப்பும் நடந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் தொடரமுடியவில்லை. இதனால் எனவே 60% படப்பிடிப்பு முடிக்கப்பட்ட பின் கதாநாயகனை மாற்றினேன். ‘ராஜா ராணி 2′-தொடரில் நடித்த சித்து இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.’பிக் பாஸ்’ தர்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்றார்.
FOLLOW US
தவறவிடாதீர்!