Last Updated : 11 Aug, 2025 07:27 AM
Published : 11 Aug 2025 07:27 AM
Last Updated : 11 Aug 2025 07:27 AM

ராபட்ர் டி நிரோ, ஆனி ஹாத்வே, ரென் ருசோ, லிண்டா லாவின் உள்பட பலர் நடித்து ஹாலிவுட்டில் வெளியான படம் ‘தி இன்டர்ன்’ . காமெடி படமான இதை நான்சி மேயர்ஸ் இயக்கினார். 2015-ம் ஆண்டு வெளியாகி, வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. 70 வயதுடைய ஒருவருக்கும் இளம் பெண் அதிகாரிக்கும் பணியிடத்தில் நடக்கும் சாத்தியமற்ற நட்பைப் பற்றி பேசும் படம் இது. இந்தப் படத்தை தீபிகா படுகோன் தயாரித்து நடிக்க இருப்பதாகவும் 70 வயதுடையவராக அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிப்பதில் இருந்து தீபிகா படுகோன் விலகியுள்ளார். அவர் இதன் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறார்.
FOLLOW US
தவறவிடாதீர்!