Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
    சினிமா

    திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

    adminBy adminSeptember 4, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    சமீபத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கில் படத்தின் வசூல் கணக்குகள் தவறாக காட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தின் வசூல் கணக்குகளையும் சரிபார்க்க தொடங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்டவற்றுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

    அந்தக் கடிதத்தில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கூறியிருப்பதாவது: “காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கு டிக்கெட் விற்பனை கணக்குகளை சரியாக கொடுக்காமல், குறைவான ஒரு கணக்கினை கொடுத்திருப்பது குறித்து சமூக ஊடங்களில் செய்தி வந்ததது. எங்கள் சங்க உறுப்பினர் குமார் இது பற்றி, அவரின் சமீபத்திய திரைப்படமான ‘மாமன்’ படத்தின் வசூல் கணக்கில் 8,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்களை இந்த திரையரங்கம் குறைவாக காட்டியுள்ளதாக ஒரு புகார் சங்கத்தில் கொடுத்துள்ளார்.

    இந்த ஒரு திரைப்படம் மட்டுமல்லாமல் அவர்கள் மேலும் பல திரைப்படங்களுக்கு இவ்வாறு செய்து வந்துள்ளார்கள் என்று அறிகிறோம். இது மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு நிகழ்வாகும். அரிதாய் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றியடைகின்றன. 10 சதவீதத்திற்கும் குறைவான தயாரிப்பாளர்கள் தான் வணிக ரீதியில் வெற்றி பெறுகிறார்கள். மீதம் அனைவரும், அவர்களின் மொத்த முதலீட்டையும் இழந்து திரைத்துறையை விட்டு போகும் நிலை தான் தற்போது உள்ளது. அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த செயலை யார் செய்தாலும் அது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, திரையரங்குகள் உட்பட. இத்தகைய செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, கீழ்கண்ட முடிவுகளை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு மனதாக எடுத்து, தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது.

    >தவறு செய்ததாக கண்டறியப்பட்ட காஞ்சிபுரம் திரையரங்குகளின், கடந்த இரண்டு வருடங்களின் அனைத்து திரைப்படங்களுக்கான கணக்கு வழக்குகள் (collection reported through DCR Vs BMS report) தணிக்கை செய்யப்பட்டு, அவர்கள் நியாயமாக தர வேண்டிய வசூலின் பங்கை, விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உடனே தர வேண்டும்.

    >அந்த தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அந்த திரையரங்கு கொடுக்க வேண்டிய அனைத்து பாக்கி தொகையும் கொடுக்கும் வரை அந்த திரையரங்குகளுக்கு எந்த புதிய படத்தையும், திரையிட அனுமதி தராமல், அனைத்து சங்கங்களும் Non-Cooperation செய்ய வேண்டும். நடப்பு தயாரிப்பளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதை கடைபிடிப்பார்கள். அதே போல, விநியோகஸ்தர் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்களும், இதை அமுல்படுத்த வேண்டும். ஒரு தொகை அபராதம் விதிப்பதின் மூலமே, இத்தகைய கண்டிக்க வேண்டிய செயலை செய்த திரையரங்கு நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் செயலுக்கு உரிய தண்டனையை அவர்கள் பெற்றாக வேண்டும்.

    >இப்போது தியேட்டர்களில் ஓடிகொண்டு இருக்கும் திரைப்படங்கள், இனி வெளியாகும் படங்களின் வசூல் விபரங்களை, திரையரங்கு உரிமையாளர்கள்/Management Team, இனி தினமும் Book My Show/Ticket New-ல் இருந்து வரும் System Generated DCR- ஐ மட்டுமே கொடுக்கவேண்டும். விநியோகஸ்தர்களும், அவர்களின் மொத்த வசூல் விபரங்களுடன் அந்த Book My Show/Ticket New-ல் இருந்து வரும் System Generated DCR-ஐ தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் அனுப்ப வேண்டும்.

    >திரையரங்குகள், வசூல் விபரங்களை சரியான முறையில் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நேரடியாக உடனே தருவதற்கான, கணனியின் (Computerized, Integrated Online Collection Reporting System) மூலம் தீர்வுகளை கொண்டுவர நமது சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அது செயல்பாட்டுக்கு வரும்வரை, மேற்குறிப்பிட்ட வசூல் விபரங்களை System Generated Book My Show/Ticket New DCR மூலமே தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தும் முறையை உடனே அமுல்படுத்துமாறு தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

    தவறு செய்த திரையரங்குக்கு மேற்குறிப்பிட்ட தணிக்கை ஏற்பாடுகளை உடனே செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    Our request to Theatre Owners Association & Distributors Association on the changes required for transparent reporting of ticket sales at theatres to safeguard Producers pic.twitter.com/siYicV5x1Y


    — Tamil Film Active Producers Association (@tfapatn) September 4, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ரஜினியே வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்: ராதாரவி பேச்சு

    September 5, 2025
    சினிமா

    ‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்

    September 5, 2025
    சினிமா

    வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

    September 4, 2025
    சினிமா

    கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்

    September 4, 2025
    சினிமா

    ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பை கையிலெடுத்த இன்பன் உதயநிதி! – தனுஷ் வாழ்த்து

    September 4, 2025
    சினிமா

    ‘மதராஸி’ ஒரு எச்சரிக்கையை கொடுக்கும்! – சிவகார்த்திகேயன் நேர்காணல்

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீங்கள் மரணத்திற்கு அருகில் இருக்கும்போது உங்கள் உணர்வுக்கு என்ன நடக்கும்: அறிவியல் விளக்கப்பட்டது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள லண்டன் பயணத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன விரிவாக்கம் குறித்து ஆலோசனை
    • உங்கள் பல் துலக்குதல், துண்டு, ஒப்பனை கடற்பாசி மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்பு அத்தியாவசியங்களை எத்தனை முறை மாற்ற வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?
    • ரஜினியே வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்: ராதாரவி பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.