தா.செ.ஞானவேல் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய் பீம்’, ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தா.செ.ஞானவேல். இவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. இதனிடையே, இவருடைய இயக்கத்தில் சரவணபவன் முதலாளியின் கதை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ‘தோசா கிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்துக்காக பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், எதுவுமே கைகூடாமல் இருந்தது. இறுதியாக மோகன்லாலை சந்தித்து இக்கதையை கூறியிருக்கிறார் தா.செ.ஞானவேல். அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மோகன்லாலின் தேதிகள் உள்ளிட்டவை முடிவானவுடம், ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது.
’தோசா கிங்’ படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் தா.செ.ஞானவேல். இதற்கான கதை மற்றும் திரைக்கதையினை முடிவு செய்யும் பணியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மோகன்லால் படம் முடிவடையும் தருவாயில் தான் சூர்யா படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.