வால்ட் டிஸ்னி அனிமேஷன் zடூடியோ தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. போலீஸ் காமெடி படமான இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது ‘ஜூடோபியா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதை ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர்.
ஜூடோபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய குற்ற வழக்கை முறியடித்த பிறகு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த போலீஸ்காரர்களான ஜூடி ஹாப்ஸ், நிக் வைல்ட் ஆகியோர், சீஃப் போகோவின் நெருக்கடி காரணமாக ஒன்று சேர்கின்றனர். ஆனால், அவர்களின் ஒற்றுமை நினைத்த அளவுக்கு உறுதியானதாக இல்லை என்பது தெரியவருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும். இதன் டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் நவ. 28-ல் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.