ஸ்டீவன் லிஸ்பெர்கர் இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற, அமெரிக்க புனைகதை சாகசத் திரைப்படம், ‘டிரான்’. இதன் அடுத்த பாகம், ‘டிரான்: லெகசி’ என்ற பெயரில் 2010-ம் ஆண்டு வெளியானது.
ஜோசப் கொசின்ஸ்கி இயக்கிய இந்தப் படத்தை அடுத்து, அதன் தொடர்ச்சியாக உருவாகி இருக்கிறது, ‘டிரான்: ஏரெஸ்’. ஜோச்சிம் ரோனிங் இயக்கியுள்ள இதில் ஜாரெட் லெட்டோ, கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ், ஜோடே டர்னர்-ஸ்மித், ஆர்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனகன், கில்லியன் ஆண்டர்சன் என பலர் நடித்துள்ளனர்.
இதன் டிரெய்லர் மற்றும் போஸ்டர்களை டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அக்.10-ல் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. >>டிரெய்லர் வீடியோ லிங்க்…