தனுஷின் வேகத்தால் இணையத்தில் பலரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘தேரே இஸ்க் மெயின்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனிடையே வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் பேட்டியொன்றில், பிப்ரவரியில் தனுஷ் – விக்னேஷ் ராஜா படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் ஜூலையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதன் முழுப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. எடிட்டிங் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, காட்சிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.
விரைவில் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ‘போர் தொழில்’ படத்தைப் போலவே இப்படத்தினையும் முழுக்க த்ரில்லர் பின்னணியிலேயே உருவாக்கி இருக்கிறார் விக்னேஷ் ராஜா.