இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜன்னா’. 2013-ம் ஆண்டு வெளியான இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படம் உருவாகியுள்ளது.
இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்திசனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சிலமாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. நவ. 28-ல் படம் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் டீஸர் தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் பற்றி ஆனந்த் எல் ராய் கூறும்போது, “காதல் என்றால் முழுமையான சரணாகதி; அது உங்களைக் குணப்படுத்தட்டும், காயப்படுத்தட்டும், மாற்றட்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த டீஸரை பாராட்டியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது சமூகவலைதளப் பக்கத்தில் தனுஷ்,கீர்த்தி சனோனை டேக் செய்து, உங்களைத் திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.