தினேஷ், கலையரசன் நடித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு அதியன் ஆதிரை இயக்கியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’.
அதியன் ஆதிரையின் முந்தைய படத்தைப் போலவே, இப்படத்தையும் தயாரித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித், இப்படத்தில் தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக பிரதீப் காளிராஜா, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
டீசர் எப்படி? – நாயகியின் வாய்ஸ் ஓவரிலேயே டீசர் முழுவதும் சொல்லப்படுகிறது. வின்சு சாம், கலையரசன் இடையிலான காதல் காட்சிகள் தான் படத்தின் அடிநாதம் என்பதை டீசரில் அறிய முடிகிறது. அதைத் தாண்டி மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராணுவப் படைகளின் தேடுதல் வேட்டை போன்றவையும் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. டீசர் முழுக்க வரும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை மனதை ஈர்க்கிறது. ‘அட்டக்கத்தி’ தினேஷ் டீசரின் இறுதியில் தோன்றினாலும், படத்தின் அவரது கதாபாத்திரம் அழுத்தமானதாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. ‘தண்டகாரண்யம்’ டீசர் வீடியோ: