‘அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’.
நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் சுந்தர் இசையமைத்துள்ளார். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தை எழுதி இயக்கியுள்ள அறிவழகன் முருகேசன் கூறும்போது, “1990-க்கு முன் பட்டுக்கோட்டையில் கொத்தடிமையாக இருந்த ஒருவன், போராடி தன் வம்சத்தை கல்விக்குத் திருப்பிய உண்மைக்கதையையும், இப்போது கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சோஷியல் மீடியா செய்யும் மாற்றங்கள், மக்களை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் சுவாரஸ்யமாக சொல்லும் படம் இது.
தஞ்சையின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் சொல்லாத வகையில் இதில் சொல்லி இருக்கிறேன்” என்றார்.