‘ட்யூட்’ படத்தின் தமிழக விநியோக உரிமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’. இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் ‘ட்யூட்’ உரிமைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என தெரிகிறது.
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்யூட்’. இதில் சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து வருகிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக நிக்கித் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
‘ட்யூட்’ படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்று பிரதீப் ரங்கநாதன் பாடி 3-வது பாடல் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலமாக பாடகராகவும் அறிமுகமாகவுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.