பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. ஆனால், இறுதிகட்டப் பணிகள் தாமதத்தினால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் ஓடிடி, தொலைக்காட்சி, இசை என அனைத்து உரிமைகளும் பெரும் விலைக்கு விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போயபட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அகண்டா 2: தாண்டவம்’. இதன் முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தை 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீஸர் இணையத்தில் கொண்டாடப்பட்டது.
இப்படத்தில் சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மால்ஹோத்ரா உள்ளிட்ட பலர் பாலகிருஷ்ணா உடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப் பதிவாளராக ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் , எடிட்டராக தம்மி ராஜு, இசையமைப் பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இருக்கும் என்கிறது படக்குழு.