விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சி ‘பக்தி சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஃபைனலுக்கு முன்னரே இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இதில் பங்கேற்றுள்ள பவித்ரா மற்றும் கார்த்திக் ஆகியோர், இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தேர்வாகியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாடகர்கள் வரும் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான தேவக்கோட்டை அபிராமிக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தான் பணிபுரியும் புதிய படத்தில் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார். அதே போல பாடகர் டி.எல்.மகாராஜன், பவித்ரா மற்றும் அலெய்னா ஆகிய இரு போட்டியாளர்களை தனது ஆன்மிக இசை ஆல்பத்தில் பாட அழைப்பு விடுத்துள்ளார்.