விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
’இறுகப்பற்று’ படத்துக்குப் பின் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் ‘ரெய்ட்’. அப்படம் பெரியளவில் எடுபடவில்லை. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த பட வெளியீட்டுக்கு தயாராகிவிட்டார் விக்ரம் பிரபு. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் உள்ளிட்ட பலர் விக்ரம் பிரவு உடன் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இதன் போஸ்டர் மற்றும் வெளியான பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நாயகனுக்கு திருமணம் தாமதமாவதால் இந்த சமூகத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இப்படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையினை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.