ஜீவா நடித்துள்ள படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஃபேலிமி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமானவர் நிதிஷ் சஹாதேவ். அப்படத்துக்குப் பிறகு தமிழில் ஜீவா நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஒட்டுமொத்தமாக முடிக்கப்பட்டு இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படத்துக்கு ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்து வருகிறார். இதில் பிரார்த்தனா, மீனாட்சி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்து வருகிறார். முழுக்க காமெடி கலந்த கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் நிதிஷ் சஹாதேவ். இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட முனைப்பு காட்டி வருகிறது படக்குழு.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் தவிர்த்து, நான்கு படங்கள் தயாரித்து வருகிறார் கண்ணன் ரவி. இப்படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்து விட்டு ராஜேஷ் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ஜீவா.