ஜீ தமிழ் சேனலில் ‘பாரிஜாதம்’ என்ற புதிய சீரியல் செப்.8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, இசை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஷிக் உர்ஸ் கோபால், சுவாதி என பலர் நடிக்கின்றனர்.
ஒரு விபத்தில், கேட்கும் தன்மையை இழக்கும் இசை, ஒரே ஒரு பொய்யால் பிரபல பாடகர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். ஜாதகத்தைப் பெரிதாக நம்பும் இசையின் மாமியார் பத்துப் பொருத்தமும் பக்காவாக இருப்பதாகச் சொல்லி இசையை, கொண்டாடுகிறார்.
ஆனால், இசையின் ஜாதகம் அவளுடைய சித்தியால் மாற்றி எழுதப்பட்டது என்ற உண்மை தெரிய வந்தால் என்ன நடக்கும்? இசைக்குக் காது கேட்காது என்ற உண்மையும் தெரிந்தால் அவளுடைய வாழ்க்கை என்னவாகும்? என்ற கதைக் களத்துடன் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதன் புதிய புரமோ வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.