தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகமான திரைப் படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது. ஆக.14-ல் மெகா பட்ஜெட்டில் உருவான ரஜினியின் ‘கூலி’ வெளியானதால், அதற்கு முந்தைய வாரமும் அடுத்தடுத்த வாரங்களிலும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் செப்.12-ம் தேதி 10 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம், குமாரசம்பவம், தணல், காயல், அந்த 7 நாட்கள், யோலோ, மதுரை 18, உருட்டு உருட்டு, தாவுத் ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதில், கடைசி நேரத்தில் சில படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என்று தெரிகிறது.