‘சூர்யா 46’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 45% படப்பிடிப்பு முடிந்திருக்கும் எனத் தெரிகிறது. தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனில் கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் கதையைக் கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
1980-க்குப் பிறகு இப்போது தான் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அனில் கபூர். அனைத்தும் ஒப்பந்தம் ரீதியாக முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. சூர்யா – அனில் கபூர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். மேலும், இப்படத்துக்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று பெயரிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சூர்யா 46’. நாகவம்சி தயாரித்து வரும் இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.