சூரி நடிப்பில் உருவாகும் ‘மண்டாடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘மாமன்’ பணிகளை முடித்துவிட்டதால், அடுத்ததாக ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூரி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
மதிமாறன் இயக்கவுள்ள இப்படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், சஞ்சனா நமிதாஸ், அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் சூரியுடன் நடிக்கவுள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
‘மண்டாடி’ படத்தின் மூலமாக தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாக உள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பார்த்தால் படகு போட்டியை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது எனத் தெரிகிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.