விஜய் டிவியில் 10 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் திரையுலகின் பாடகர்களாக வலம் வருகின்றனர். இன்னும் பலர் சுயாதீன இசைக் கலைஞர்களாகவும் உள்ளனர்.
பிரபல முன்னணி பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 11-வது சீசன் கடந்த ஆகஸ்ட் 2 முதல் தொடங்கியது.
இதில் டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ் சென்னை தமிழ் என இந்த முறை பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சீசனில் இயக்குநர் மிஷ்கின் நடுவராக பங்கேற்றுள்ளார்.
இன்னொரு புறம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டு நிழச்சிகளின் பங்கேற்பாளர்களும் ஒன்றாக பங்கேற்கும், ‘சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்’ எனும் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இது தொடர்பான புரோமோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.