நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் ‘ராமாயணம்’ படத்தின் சீதையாக நடித்து வரும் அவர், இந்தி நடிகர் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்து வந்தார்.
சுனில் பாண்டே இயக்கியுள்ள இந்த காதல் படத்துக்கு முதலில் ‘ஏக் தின்’ என்று தலைப்பு வைத்திருந்தனர். இந்நிலையில் அதை ‘மேரே ரஹோ’ என்று மாற்றியுள்ளனர். படப்பிடிப்புக்காகத் தற்காலிகமாக வைக்கப்பட்ட தலைப்பு ‘ஏக் தின்’ என்றும் ‘மேரே ரஹோ’தான் படத்தின் தலைப்பு என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதன் முக்கியமான காட்சிகள், ஜப்பானின் சப்போராவில் நடக்கும் பனி திருவிழாவில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் நவ.7-ம் தேதி வெளியாக இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. இந்நிலையில் டிச.12-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.