அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் இயக்கியுள்ள படம் ‘மரியா’. சாய்ஸ்ரீ பிரபாகரன் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பவேல் நவகீதன் சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை டார்க் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி. மணிஷங்கர் ஒளிப்பதிவு செய்ய, கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்ஷன் இசையமைத்துள்ளனர். கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘மரியா’ திரைப்படம் பல முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், டெல்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகியவற்றில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. மேலும், சிறந்த இந்திய திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த இசை என பல விருதுகளையும் பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது .