தனது பேட்டிங்கை சச்சின் பாராட்டியது குறித்து தமன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
’ஓஜி’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு இயக்குநர் சுஜித்துடன் சென்றிருந்தார் இசையமைப்பாளர் தமன். அங்குள்ள கொண்டாட்டத்தை முடித்துவிட்டு டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு பயணித்துள்ளார். தமன் பயணம் செய்த அதே விமானத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார்.
சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன், “கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணத்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும் வரை அருமையான நேரமாக அமைந்தது. என்னுடைய சிசிஎல் போட்டிகளின் போது பேட்டிங் செய்த வீடியோக்களை அவருக்கு காட்டினேன். அப்போது மாஸ்டர் சச்சின் “உங்களிடம் சிறந்த பேட்டின் வேகம் இருக்கிறது” என்று கூறினார். அந்த வார்த்தைகளை மறக்க முடியாது. விரைவில் அவருடன் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் தமன்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் தமன். தெலுங்கில் ‘அகண்டா 2’, ‘த்ரிவிக்ரம் – வெங்கடேஷ் படம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Traveling with God of Cricket the Legend @sachin_rt
Had some lovely time all the way from dallas to Dubai
Showed him the @ccl matches clips of mine batting .
The master said u have a great bat Speed
Uhffffffff SortedMight work with him soon … pic.twitter.com/FxKd6Ddx4L
— thaman S (@MusicThaman) October 6, 2025