விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சக்தித் திருமகன்’ படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தித் திருமகன்’ படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் பணிகள் முழுமையாக முடிவடையாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 19-ம் தேதி வெளியீட்டுக்கு தள்ளிவைத்துள்ளது படக்குழு. இதனை விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் 25-வது படமாகும். விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் இப்படம் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
‘சக்தித் திருமகன்’ படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருக் கிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக ஷெலி கலிஸ்ட், எடிட்டராக ரேமண்ட் உள்ளிட்டோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.